வேணாம்டா சாமி ஹைதராபாத்... சென்னையே போதும்!!! ரஜினியால் அல்லோலப்படும் அண்ணாத்த டீம்?
கொரோனாவால் னிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் ஆனவுடன் ரஜினி சென்னை திரும்பினார். அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கட்சி துவங்கவில்லை என்று அறிவித்தார் ரஜினி. கொரோனா பிரச்சனை தற்போதைக்கு தீர்வதாக இல்லை. மேலும் கொரோனா புது உருவத்தில் வேறு வந்து மிரட்டுகிறது. அப்படி என்றால் அண்ணாத்த படப்பிடிப்பு என்னவாகும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் ரஜினி. அவர் ஹைதராபாத் வரை பயணம் செய்ய முடியாது என்பதால் சென்னையிலேயே செட் போடுகிறார்களாம்.
அண்ணாத்த படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் தான் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியாது என படக்குழு புலம்பி வருகின்றது