×

அரசியல் ஓவர்... அண்ணாத்தே ஷூட்டிங் எப்போ?... புதிய அப்டேட்...

 

தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி தெரிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வரும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. அவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும், பரிசோதனை செய்தும், படக்குழுவில் 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம்,  ரஜினி  படப்பிடிப்பிற்கு வர தாமதம் செய்தால் பல கோடி நஷ்டம் ஏற்படும். அதோடு, மற்ற நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டை மீண்டும் பெருவதும் சிரமம். எனவே, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்தே திரைப்படம் ரஜினிக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News