×

வந்தேண்டா பால்காரன் பாணியில் ‘அண்ணாத்தே’ பாடல்: படக்குழுவினர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அண்ணாத்தே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ரஜினிக்கான ஓபனிங் பாடலை டி.இமான் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் இந்த பாடல் ’அண்ணாமலை’ படத்தில் இடம்பெற்ற ’வந்தேன்டா பால்காரன்’ பாணியில் கம்போஸ் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த பாடலில் ‘அண்ணாத்தே’ என்ற வார்த்தை அடிக்கடி வரும் வகையில் பாடல் வரிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மேலும் அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு பிறகு ரஜினியின் ஓப்பனிங் சாங் பிரம்மாண்டமாக வேறு எந்த படத்திலும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த நிலையில் இந்த இந்தப் பாடல் மிகவும் பிரமாண்டமாக ஒரு பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே ’தலைவர் 168’ படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்தே’ பாடல் திரையில் தோன்றும் போது தியேட்டரே எழுந்து ஆடும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News