ரீமேக்காகும் அந்நியன்... ஆனா விக்ரம் இல்ல... ஷங்கரின் புது ப்ளான்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குனர் ஷங்கர் என்பது ஊரறிந்த விஷயம். முக்கியமான ஒரு சமூக பிரச்சனையை பேசும் படத்தையே எப்போதும் இயக்கி வருகிறார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் பெரிய விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன காரணத்தால், இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். டோலிவுட்டின் முன்னணி பிரபலங்களான நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் முதல்முறையாக ஷங்கர் கைகோர்த்திருக்கிறார்.
இந்நிலையில், ஷங்கர் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரன்வீர் சிங் நடிக்க இருக்கும் அப்படம் தமிழின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான அந்நியன் ரீமேக் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.