×

5 இயக்குனர்கள் உருவாக்கிய ‘புத்தம் புது காலை’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

கொரோனா ஊரடங்கால் திரைப்பட துறையும் முடங்கியது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனவே, புதிய திரைப்படங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணயதளங்களில் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பென்குயின், லாக்கப் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்கள் அமேசான் பிரைமில் வெளியானது. அதேபோல், சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படமும் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன்,கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் 5 பேரும் 5 குறும்படங்களை இயக்கியுள்ளனர். இதற்கு புத்தம் புது காலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆந்தாலஜி திரைப்படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News