×

'சூரரை போற்று’ மாறா தீம் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூர்யா ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், ‘மாறாதீம்’ என்று தொடங்கும் இந்த பாடலின் ஒரு சில காட்சிகள் சமீபத்தில் வெளிவந்து சமூக வழக்கங்கள் ஸ்தம்பிக்க வைத்தது என்றும் தெரிந்தது 

இந்த நிலையில் ‘மாறாதீம்’ பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று சற்று முன்னர் அதிகாரபூர்வமாக படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர். நாளை மாலை 4 மணிக்கு மேல் ‘‘மாறாதீம்’ தான் டிரெண்டிங்கில் இருக்கும் என்பது இப்போதே உறுதியாகியுள்ளது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News