ஒன்னோடு முடிச்சிக்கோங்க! மீண்டும் விவாகரத்தா? சம்யுக்தா பேச்சால் சலசலப்பு!
பிக்பாஸ் சம்யுக்தா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா. மாடல் அழகியாக இருந்த இவர் விஜே பாவனாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொரோனா பீரியடில் அவருடைய கணவர் கார்த்திக் வேறொரு பெண்ணுடன் திருமண உறவை தாண்டி ரகசிய உறவில் இருந்துள்ளார்.
தகாத உறவில் கணவர்:
இது தனக்கு தெரிந்த உடனே தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு அவரிடம் இருந்து பிரிந்து இந்தியாவிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு கூட அவர் எனக்கு விவாகரத்து கொடுக்கவில்லை என பேசியிருந்தது குறிப்பிடுத்தக்கது .
அதன் பிறகு தனது தோழியான விஜே பாவனாவின் உதவியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மாடலிங் துறையிலும் பிசியாக இருந்து வந்தார்.
மறுமணம்:
தன்னுடைய தோழியின் மூலமாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன அனிருதா ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சம்யுக்தா பேட்டி கொடுத்திருக்கும் விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது, இன்னொரு திருமணமோ, பார்ட்னரோ தேவையே இல்லை. ஒரு முறை ஒரு பார்ட்னரோடு செட் ஆகவில்லை என்றால் பெண்களாகிய நாம் நம்முடைய உடல்நிலை மனநிலை பொருளாதார நிலை இவை அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர இன்னொரு நபருடன் சென்று விழக்கூடாது .
மீண்டும் விவாகரத்தா?
அது மட்டும் இல்லாமல் முன்பு மாதிரி இப்போது பெண்கள் இல்லை….. தனித்து வாழ்ந்து வெற்றிபெறுகிறார்கள். எப்போதுமே பெண்ணிற்கான அடையாளம் அந்த பெண்ணுடையதாக தான் இருக்க வேண்டும். அவரது பார்ட்னரின் அடையாளமாக இருக்கவே கூடாது.
வீட்டு வேலைகள் செய்வதிலே அடங்கிவிடுகிறார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணும் தனக்கான தனித்த அடையாளத்தை கொண்டு சிறந்த பெண்மணியாக வாழ வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
இதை வைத்துப் பார்த்தால் ஒரு வேலை சம்யுக்தா இரண்டாவது கணவரையும் பிரிந்துவிட்டாரோ? அதனால் தான் இப்படி ஃபெமினிசம் பேசி வருகிறாரா? என கேள்வி எழுப்புகிறார்கள்கேள்வி எழுகிறது.
