Connect with us
Anshitha

Bigg Boss

Anshitha: என்னுடைய மூன்று வருட காதலன் வேறு பெண்ணுடன்… கதறி துடித்த அன்ஷிதா… யாருனு தெரிதா?

Anshitha: பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் கலந்து கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதா தன்னுடைய காதலர் குறித்து தெரிவித்திருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களிடம் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

அன்ஷிதா சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செல்லம்மா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை அன்ஷிதா. அவருடைய ஜோடியாக நடித்த அர்னவுடன் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவுகளை வெளியிடுவது வழக்கமாக வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: Tamannah: பாலிவுட் இல்ல…! டைரக்ட்டா ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா… ஸ்டைலிஷ் லுக்!…

இந்த நேரத்தில்தான் அன்ஷிதா மற்றும் அர்னவ் மீது அவருடைய முன்னாள் மனைவி திவ்யா ஓபனாக குற்றச்சாட்டை முன் வைத்தார். இருவருக்கும் தகாத பழக்கம் இருப்பதால் மட்டுமே தன்னை அர்னவ் விலகியதாக பதிவிட்டு இருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.

அன்ஷிதாவின் ஆடியோ: இந்த பிரச்னை வெடித்து கொண்டு இருந்த நேரத்தில் அன்ஷிதா அர்னவிடம் ஐ லவ் யூடா அர்னவ் என்பதும், திவ்யாவை வெட்டி நாயிற்கு போட்டு விடுவேன் எனக் கூறியதும் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் ஜோடியாக பிக்பாஸ் தமிழுக்குள் வந்தனர்.

அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக்பாஸ் தமிழில் வந்தாலும் பெரிய அளவில் ஒன்றாக வலம் வரவில்லை. இரண்டு வாரங்கள் அர்னவ் நிகழ்ச்சிக்குள் இருந்தாலும் அன்ஷிதாவுடன் பேசியதே சில நிமிடங்களாக இருந்தது. அவர் வெளியேறிய போது அன்ஷிதா அழுதார். இருந்தும் தன்னை தேற்றிக்கொண்டு தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: Kanguva: ‘கங்குவா’ டிரெய்லரில் கடைசி சீன் நோட் பண்ணீங்களா? தயாரிப்பாளரின் பேராசையால் மாறிய கதை

அன்ஷிதாவின் காதல்: இந்நிலையில் நேற்று தன்னுடைய முத்து, பவித்ரா உள்ளிட்ட சக போட்டியாளர்களிடம் காதல் வாழ்க்கை குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.  அப்போது எனக்கும், அவனுக்கும் மூன்று வருடமாக காதல் இருந்தது.

முதலில் நல்லா இருந்தது. ஓவர் பொசசிஸ்வாக நடந்து கொள்வான். நான் கியூட்டாக சுற்றி வந்தேன். என் பக்கம் தவறு இருக்கிறது. 3 மாதத்துக்கு முன்னர் நான் வேறு ஒரு இந்தி பெண்ணை காதலிப்பதாக சொன்னான். பேய் அறைந்தது போல் ஆகிவிட்டேன். நான் முழுதாக அவன் மீது தப்பு சொல்லவில்லை.

நான் எதுவோ சரியாக காட்டவில்லை என நினைத்தேன். என்னுடைய தோழியிடம் அழுது ஒப்பாரி வைத்தேன். இங்கு வந்த அன்று கூட மருத்துவரிடம் பேசி கலந்து ஆலோசித்துவிட்டு வந்தேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அன்ஷிதா தன்னுடைய காதலர் பெயரை குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top