
latest news
அசத்தலான ரொமாண்டிக் திரில்லர்!.. அந்த 7 நாட்கள் டிரெய்லர் வீடியோ ரிலீஸ்!..
Antha7Naatkal: தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை ரொமாண்டிக் திரில்லர் வகை திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வகையில் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம்தான் அந்த 7 நாட்கள். முரளி கபீர்தாஸ் தயாரிப்பில் எம்.சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு சச்சின் சுந்தர் இசையமைத்திருக்கிறார். முத்தமிழன் ராமு எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு தரமான ரொமான்டிக் திரில்லர் படத்தை படக்குழு உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தின் முதல் சிங்கிளான ‘ ரதியே ரதியே’ ஹரிச்சரண் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த பாடலை மோகன் ராஜா எழுதியிருந்தார். இசை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு அந்த 7 நாட்கள் என்கிற தலைப்பில் கே.பாக்யராஜ் கதை திரைக்கதை வசனம் இயக்கி நடித்து ஒரு படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது அதே தலைப்பில் ஒரு படம் உருவாகி இருப்பதால் இந்த படத்திலும் செண்டுமெண்டாக கே.பாக்யராஜை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதுவும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில்தான் அந்த ஏழு நாட்கள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்களிடம் ஹைப்பேற்றும் பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளோடு திரில்லர் காட்சிகளும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போதே படம் பார்க்கும் ஆவலை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
டிரெய்லருக்கு அமைக்கப்பட்ட பின்னணி இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. படத்தில் பணி புரிந்துள்ள தொழில்நுட்ப அணி முழு திறமைகளையும் கொட்டி டிரெய்லரை உருவாக்கி இருக்கிறார்கள்.
வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் விதமாக அந்த 7 நாட்கள் படம் வெளியாக உள்ளது.