×

சர்ச்சையை கிளப்பிய மோஷன் போஸ்டர்... இப்படியா கழுவு ஊத்துரது?

ரஜினி கமல் அஜீத் விஜய் உள்பட அனைத்து பெரிய நடிகர்களின் படங்களையும் கழுவி கழுவி ஊற்றி விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
 
ப்ளு சட்டை மாறனை டிஜிட்டல் உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவர் ஒரு படம் விமர்சனம் செய்கிறார் என்றால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு தான் கிடப்பார்கள்.

அந்த அளவிற்கு கடுமையான விமர்சகர். அந்த அளவிற்கு இவருடைய திரை விமர்சனங்கள் சர்ச்சையை சந்திக்கும். ப்ளூ சட்டை மாறன் கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார்.

‘ஆண்ட்டி இந்தியன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து இருப்பதாகவும் குறிப்பாக யூடியூப் பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் நையாண்டி மற்றும் காமெடி கலந்த இந்த படத்தில் பாஜக அரசை நக்கல், நய்யாண்டி அடித்து எடுத்துள்ளார். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படத்திற்கு தடை விதித்து இருந்தார்கள். 

தற்போது படத்தை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என டி, ராஜேந்தரை போல் பன்முக திறமைகளை காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

From around the web

Trending Videos

Tamilnadu News