×

38 இடத்துல கட்!.. வெளிவருமா புளுசட்ட மாறனின் ‘ஆண்டி இண்டியன்’?...

 
blue sattai

தமிழ் சினிமாக்களை விமர்சனம் என்ற பெயரில் பிரித்து மேய்ந்து வருபவர் புளுசட்ட மாறன். எத்தனை பேர் பாராட்டினாலும் இவர் படத்தை கிழித்து தொங்கப்போட்டு விடுவார். திரையுலகில் பல இயக்குனர்கள் இவருக்கு எதிராக கொதித்தெழுந்த சம்பவமெல்லாம் நடந்தது. 

ஒரு கட்டத்தில் நீ ஒரு படத்தை இயக்கு.. அது எப்படி இருக்குன்னு நாங்க பாக்குறோம் என பலரும் கூற, அந்த சவாலை ஏற்று ‘ஆண்டி இண்டியன்’ என அதகளமான தலைப்புடன் களம் இறங்கினார் புளுசட்டமாறன்.

தற்போது படம் ஒரு வழியாக முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவில் மத்திய அரசின் ஆதரவாளர்கள் இருப்பதால் அவர்கள் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் பல இடங்களில் காட்சி இருப்பதால் 38 இடத்தில் கட் கொடுக்குறோம். 

ஆண்டி இண்டியன் என்கிற தலைப்பையும் மாற்றுங்கள். உங்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கிறோம் எனக்கூற அதிர்ந்து போனார் புளூசட்டமாறன். மேல் முறையீடு சென்ற பின்பும் இதே பதில்தான் அவருக்கு கிடைத்துள்ளது.

எனவே, என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகிறாராம் புளூசட்டமாறன்..

From around the web

Trending Videos

Tamilnadu News