தமிழ் இயக்குனரை லவ்வும் அனு இம்மானுவேல்... வட போச்சு என புலம்பும் இளசுகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அனு இம்மானுவேல். அமெரிக்காவில் படித்து வளர்ந்திருந்தாலும் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.
தெலுங்கில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான மஞ்சு படம் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல், அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார். இந்தநிலையில், இவர் இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவை டேட் செய்வதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனான ஜோதி கிருஷ்ணா, கடந்த 2017ம் ஆண்டு ஆக்ஸிஜன் என்ற தெலுங்குப் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் கோபிசந்துக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார். அப்போது முதலே இருவரும் பழகி வந்த நிலையில், தற்போது பழக்கத்தை ரிலேஷன்ஷிப்பை நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள் இருவரும் என்று சொல்கிறார்கள்.