வாழ்நாள் கனவு நனவானது!.. பேங் பேங் ஹீரோயின் அனுக்ரீத்தி சொல்றதை கேளுங்க!..

 
ak

பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘பேங் பேங்’ பட டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். டீசரில் இடம்பெற்ற அந்த ஒய் பிளட் சேம் காமெடி எல்லாம் வேறலெவல்.

சாம் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அனுக்ரீத்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபுதேவா மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இருவருடனும் ஒரே திரையில் நடிப்பது தனது கனவு நனவான தருணம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

bb

மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு நன்றி தெரிவித்துள்ள அனுக்ரீத்தி, படப்பிடிப்பில் தாங்கள் மிகவும் ரசித்து பணியாற்றிய காட்சிகளை ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

pv

‘பேங் பேங்’ திரைப்படம் காமெடி, ஆக்‌ஷன் மற்றும் ஜாம்பி ஹாரர் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது. டீசரில் ஒரு பகுதியில் ஜாம்பிக்கள் நகரத்தை ஆக்கிரமிக்க அவர்களிடம் இருந்து தப்பிக்க பிரபுதேவா மற்றும் வடிவேலு முயற்சிப்பது போன்று காட்சிகள் அமைந்துள்ளன. 

pv

இதனால் வழக்கமான காமெடி படங்களை விட வித்தியாசமான அனுபவத்தை இப்படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பேங் பேங் திரைப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை வழங்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அனுக்ரீத்தி ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்து விட்டார். பேங் பேங் வெற்றி பெற்றால், தொடர்ந்து அவருக்கும் பட வாய்ப்புகள் குவியும் என்கின்றனர்.

Tags

From Around the web