50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமோல் கொடுத்த பரிசு!..

 
anumol

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகை அனுமோல் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.  பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அனுமோல் செய்துள்ள இந்தச் செயல் தற்போது கவனம் பெற்றுள்ளது. 

நடிகை அனுமோல் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தமிழில் வெளியான திலகர், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், அயலி வெப் சீரிஸில் நடித்து கவனம் பெற்றதுடன் தற்போது ஹார்ட் பீட் வெப் சீரிஸ் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிப்பைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும் அனுமோலின் இந்த முயற்சி, பெண்களின் உழைப்பை மதிப்பதுடன் அவர்களை ஊக்கப்படுத்தும்  இவரது இந்த உதவிக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் தங்களது சொந்தக் காலில் நின்று குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு உழைப்பதை ஊர்ச்சாகப்படுத்தும் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

From Around the web