×

அவரை உண்மையாக தான் காதலித்தேன்... ஆனால் என்னவோ? மனம் திறந்த அனுபமா?

அது உண்மையான காதல் ஆனால் முறிந்துவிட்டது என்றார். அந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை, காதலரை பிரிய வேண்டியதாகிவிட்டது என்று தெரிவித்தார்.
 
e3b04dbd-47b9-4286-a2b1-52d6fd5ba906

தன் காதல் முறிவு குறித்து சமூக வலைதளத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷின் கொடி மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். 

அவர் மலையாளம், தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

என்ன வேலையாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அனுபமா.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் அனுபமா. நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதற்கு அனுபமாவோ, ஆமாம். அது உண்மையான காதல் ஆனால் முறிந்துவிட்டது என்றார். அந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை, காதலரை பிரிய வேண்டியதாகிவிட்டது என்று தெரிவித்தார் அனுபமா.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பாட்டு பாடினார் அனுபமா. மன நிம்மதிக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, அண்மையில் தான் ஓவியம் வரையத் துவங்கினேன். அது மிகவும் பிடித்திருக்கிறது. அமைதி என்பது நமக்குள் இருந்து வர வேண்டும் என நினைக்கிறேன் என்று பதில் அளித்தார்.

தெலுங்கு நடிகர் ராம் போதினேனி பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, நல்ல நண்பர் என்றார் அனுபமா.

பிடித்த உணவு எது என்கிற கேள்விக்கு, அம்மா சமைக்கும் அனைத்தும் பிடிக்கும். எனக்கு கேரளா உணவு பிடிக்கும். மேலும் பிரியாணி பிடிக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடுவேன் என்றார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News