கண்ணழகா காலழகா.... 3 பட ஃபீலிங்சில் மூழ்கிய அனுபமா - வீடியோ!

 
anupama parameshwaran

அனுபமா பரமேஸ்வரன்: 

நேச்சுரல் ஆன அழகில் திரைப்படங்களில் நடித்து ஆரம்பத்திலேயே திரைப்பட ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து இழுத்தவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மலையாள நடிகையான இவர் கேரள திருச்சூரில் வசித்து வருகிறார் .

anupama parameshwaran

2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்த இவர் முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

படங்கள்: 

குறிப்பாக இவரது தோற்றம் மற்றும் சுருள் முடி உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. அதன் பிறகு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தனுஷ் உடன் நடித்த கொடி திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. 

anupama parameshwaran

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பைசன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படத்தின் ஹீரோவான துருவ் விக்ரம் உடன் இவர் காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

கண்ணழகா காலழகா....

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அனுபமா தற்போது 3 படத்தின் ஸ்ருதிஹாசன் கெட்டப்பில் கண்ணழகா காலழகா பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

From Around the web