×

மீண்டும் ட்ரெண்டிங்கில் அனுபமா பரமேஸ்வரன்... கொண்டாடும் ரசிகர்கள்

தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுபமா பரமேஸ்வரனின் ஷார்ட் பிலிமை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
 

கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுபமா, தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். டோலிவுட்டில் அவருக்கென தனி ஃபேன் பேஸே இருக்கிறது. அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவர், சமீபத்தில் ஆர்.ஜே ஷான் இயக்கிய `Freedom at Midnight' என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார். 


மலையாளத்திலும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் யூ டியூபில் இந்த ஷார்ட் பிலிம் வெளியானது. கணவன் - மனைவி இடையிலான குடும்பச் சிக்கல்களை எமோஷனலானப் பேசும் இந்த ஷார்ட் பிலிமுக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்புக் கொடுத்திருக்கிறார்கள். இதில், அனுபமாவுடன் மலையாள நடிகர் ஹக்கீம் ஷாஜகான் நடித்திருந்தார். குறிப்பாக இந்த ஷார்ட் பிலிமின் தெலுங்கு வெர்ஷனை யூடியூபில் 45 லட்சம் பேர் பார்த்திருக்கிறார். இதனால், அனுபமா மகிழ்ச்சியில் இருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News