Categories: Cinema News latest news

காலம் கடந்து இளம் நடிகரின் காதல் வலையில் அனுஷ்கா… இந்த வயசுல இதெல்லாம் செட் ஆகுமா.?!

தமிழ் சினிமாவில் “ரெண்டு” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.  இவருக்கு சொல்லும்படி, தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு நாகார்ஜுனா, மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அடுத்ததாக, தமிழில் சூர்யா, விக்ரம், விஜய் என பல டாப் நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமாக தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியான சிங்கம்1,சிங்கம் 2,சிங்கம் 3 ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

அதன்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து அப்போது பார்க்கையில் பல பெரிய படங்களில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல் எடை அதிகரித்தது நாள் என்னவோ, அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது.

இதையும் படியுங்களேன்- அஜித் பாட்டு போட்டு நடந்த தனுஷ் பட ஷூட்டிங்.. அதுவும் செம ரொமான்ஸ் காட்சியாம்.. உளறிய இளம் நடிகை..

இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆம், அனுஷ்கா ஷெட்டி மீண்டும் தனது உடல் எடையை குறைத்து புதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

இந்த படத்தில் ஒரு புது இளம் நடிகர் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இந்த படம் வயதுக்கு மூத்த பெண்ணை காதல் செய்யும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாம். வயது குறைந்த நடிகருக்கு அனுஷ்கா ஜோடியாக நடிப்பதால் அது எப்படி செட் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan