பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர் கடந்த 2008ல் அதிதி சோப்ரா இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த Rab Ne Bana Di Jodi என்ற ஹிந்தி படத்தின்மூலமாக பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கடந்த 2016ல் இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘சுல்தான்’ படம் இந்திய அளவில் பேசப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து வந்த இவர் கடந்த 2017ல் அவரை திருமணம் செய்துகொண்டார்.
anushka sharma
திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவந்தார் அனுஷ்கா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகியாகவும் உள்ளார். கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இவர் அதன்பின் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
சிலமாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது இவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
anushka sharma
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தற்போது அனுஸ்கா Mai, Qala என்ற இரண்டு ஹிந்தி படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…