×

டி சர்ட்டுக்குக் கூட காசில்லையா அனுஷ்கா... ஷாக்கான விராத் ரசிகர்கள்

தனது கர்ப்ப காலத்தில் கணவர் விராட் கோலியின் டீ-சர்டைப் பயன்படுத்தியதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா. 
 
 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் நடந்தது. விருஷ்கா என்று நெட்டிசன்களால் கொண்டாடப்படும் இந்த ஜோடி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறது. திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.


ஜனவரி 11-ம் தேதி தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாக விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த
விராட் கோலி, ``எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருப்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களது பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. இந்த சமயத்தில் எங்களுடைய பிரைவசியை நீங்கள் மதிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று ட்விட்டரில் நெகிழ்ந்திருக்கிறார்.   இந்தசூழலில், அனுஷ்கா ஷர்மா ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார். வார இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த அனுஷ்கா, தான் கர்ப்பகால சூழல்
அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், கர்ப்ப காலத்தில் விராட் கோலியின் உடைகளை அணிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதாக நெகிழ்ந்திருக்கிறார் அனுஷ்கா. அத்லெட்டான விராட் கோலியின் டி-ஷர்டுகளையே அதிகம்
பயன்படுத்தியதகாக் கூறி வெட்கப் புன்னகை செய்திருக்கிறார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News