×

விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா? - கசிந்த செய்தி
 

சில வருடங்களுக்கு முன் வரை தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தெலுங்கில் சைஸ் ஜீரோ (தமிழில் இஞ்சி இடுப்பழகி) படத்தில் உடலின் எடையை கூட்டினார். அதன்பின் உடல் எடையை அவரால் குறைக்க முடியவில்லை.
 

எனவே, திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து முன்னணி நடிகையின் இடத்தை இழந்தார். ரசிகர்கள் அவரை கடைசியாக பாகுபலியில் பார்த்ததோடு சரி. மேலும், பாகுபலி நாயகன் பிரபாஸை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. ஆனால் இருவருமே அதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், சைஸ்  ஜீரோ படத்தின் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்யவிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். ஆனாலும், அவர்கள்  இருவர்கள் யாரேனும் ஒருவர் கூறினால் மட்டுமே இது உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவரும்.

From around the web

Trending Videos

Tamilnadu News