×

ஒரே படத்தில் உயரத்திற்கு போன அபர்ணா - இனிமேல் சம்பளம் இதுதானாம்!

 

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர். அதேபோல், இப்படத்தில் சூர்யாவின் மனைவி பொம்மி வேடத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

aparna

சமூக வலைத்தளங்களில் பலரும் அவரின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். பொம்மி போல் ஒரு மனைவி வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அபர்ணா தற்போது தனது சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை சரியாக புரிந்து கொண்டவர் அபர்ணா..

From around the web

Trending Videos

Tamilnadu News