×

’தர்பார்’ தோல்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தான் காரணம்: பிரபல தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கலன்று வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
 

குறிப்பாக இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் இந்த நஷ்டத்தை ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஈடுகட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கேயார் அவர்கள் ’தர்பார்’ படத்தின் தோல்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் கதையையும், ரஜினியின் கேரக்டரையும் அவரால் சரியாக கையாளத் தெரியவில்லை என்றும் ஒரு புதுமுக இயக்குனர் கூட இந்த படத்தை இதைவிட நன்றாக இயக்கி இருப்பார் என்றும் அவர் தெரிவிக்கிறார் 

நான் கேள்விப்பட்ட வரையில் ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கு 33 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என்றும், 30 லட்சம் சம்பளம் கொடுத்தால் திறமையான இயக்குனர்கள் கோலிவுட்டில் கொட்டி கிடக்கும் நிலையில் இவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்து ஏஆர் முருகதாஸை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் தவிர வேறு யார் இயக்கியிருந்தாலும் பட்ஜெட்டும் குறைந்திருக்கும் படமும் வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

கேயாரின் இந்த கருத்தை நெட்டிசன்கள் பலர் ஆதரித்து வருகின்றனர். ரூபாய் 50 லட்சம் மட்டும் சம்பளம் பெற்ற யோகேஷ் கனகராஜ், ‘கைதி’ படத்தை இயக்கி மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுக் கொடுத்தார் என்றும் ஆனால் 33 கோடி சம்பளம் வாங்கிய ஏஆர் முருகதாஸ் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News