சிக்ஸ் பேக்குக்கு விதை போட்டதே அஜித்தான்!.. அப்புறம்தான் சூர்யா அமீர்கான்.. இயக்குனர் பேட்டி..
Ajithkumar: தமிழ் திரை உலகில் யார் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார்கள் என்கிற பேச்சு சில நாட்களுக்கு முன்பு எழுந்தது. நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ பட விழாவில் பேசிய அவரின் அப்பா சிவக்குமார் ‘என் மகன் சூர்யாதான் கோலிவுட்டில் முதன் முதலாக சிக்ஸ் பேக் வைத்தான். வேற எவன் வைத்தான்?’ எனக்கேட்டு பரபரப்பை உண்டாக்கினார்.
ஆனால் சத்தியம் படத்திற்காக விஷால், பொல்லாதவன் படத்திற்காக தனுஷ் ஆகியோர் சிக்ஸ் பேக் வைத்ததாக பலரும் சொன்னார்கள். ஒருபக்கம் நடிகர் அருண் விஜய் ‘நான் பல வருடங்களுக்கு முன்பே சிக்ஸ் பேக் வைத்தேன்’ என பேட்டி கொடுத்தார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திற்காகத்தான் சூர்யா முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தார்.
இந்த படம் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்ததோடு அவரின் திரை வாழ்விலும் இது முக்கிய படமாக அமைந்தது. உண்மையில் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் அஜித். மிரட்டல் என்கிற தலைப்பில் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அஜித் நடிக்காமல் போக அதே கதையில் சூர்யா நடிக்க கஜினி உருவானது.
தமிழ் கஜினியில் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடித்ததால் இதே கதையை ஹிந்தியில் அமீர்கானை வைத்து முருகதாஸ் எடுத்த போது அந்த படத்திலும் அமீர்கான் சிக்ஸ் பேக் வைத்தார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ் ‘அஜித் சாரிடம் மிரட்டல் பட கதையை சொன்னபோது ‘இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்கிறேன்’ என சொன்னார். அப்போதெல்லாம் சிக்ஸ் பேக் என்கிற கான்செப்ட் கிடையாது. சூர்யா, அமீர்கான் ஆகியோரை சிக்ஸ் பேக் வைக்க சொன்னதும் அஜித் சாரால்தான்.. அதற்கு பிறகுதான் சிக்ஸ் பேக் என்கிற கலாச்சாரமே உருவானது’ என சொல்லி இருக்கிறார்.
மேலும் ‘மிரட்டல் படத்தில் சஞ்சய் ராமசாமியாக அஜித் சார் இரண்டு நாட்கள் நடித்த காட்சிகள் இன்னமும் என்னிடம் இருக்கிறது. அதை இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது’ என சொல்லி இருக்கிறார்.
