Connect with us
arm

Cinema News

மக்கள் கிட்ட ஒரு தாக்கம் வரணும்னா அதுக்கு இவங்க தான் சரி.. ஒரே போடாய் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது படங்களின் மூலம் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை மசாலா கலந்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது இவரது வழக்கம். தனது முதல் படம் தொடங்கி தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார்.

இந்நிலையில் மகேஷ் பாபு உடன் இணைந்த ஸ்பைடர் திரைப்படம் அட்டர் பிளாப் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கடைசியாக இவர் பாலிவுட்டில் இயக்கி வெளியான சிக்கந்தர் திரைப்படம் வரை தொடர் தோல்விகளை சந்தித்து கோலிவுட்டின் அவுட்டேடட் இயக்குனர் என கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இருப்பினும் அடுத்தடுத்து படங்களில் தனது பழைய ஃபார்மை கொண்டுவர போராடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவரின் இயக்கத்தில் வெளியான கத்தி திரைப்படம்தான் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம்.

அதன் பிறகு சுமார் பத்து வருடங்களா மேல் எந்த ஒரு பிளாக்பஸ்டரையும் இவர் கொடுத்ததில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கியுள்ள மதராஸி மதராசி திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் அமரன் என்னும் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் வெளிவரும் படம் இது. அதேபோல ஏ.ஆர்.முருகதாஸும் வெற்றி கொடுத்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையில் உள்ளார்.

பேட்டி ஒன்றில் இந்த படம் என்னுடைய முந்தைய படங்களான கஜினி மற்றும் துப்பாக்கி சாயலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே மதராஸி டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய படங்களில் சமூக கருத்துக்களை தொடர்ந்து சொல்லிவரும் ஏ.ஆர் முருகதாஸ் அதை இவர்கள் சொன்னால் மட்டுமே சரியாக இருக்கும் என்று ஆணித்தனமாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

“எல்லாரும் ஓட்டு போடணும்னு ஒரு கதையை ரெண்டு நிமிஷம் வாயில சொல்லிட்டு போயிடலாம். இதை ஒரு படமா எடுக்கணும்னா ஒரு சேலஞ்ச் இருக்கு. விஜய் சார் மாதிரி விஜயகாந்த் சார் மாதிரி ஒரு பெரிய ஹீரோ சொல்லும் போது அது மக்களிடம் நிச்சயமாக ஒரு தாக்கத்தை உருவாக்கும்”. என்று கூறியுள்ளார். விஜய் வைத்து இவர் இயக்கிய கத்தி, சர்க்கார் திரைப்படத்திலும் மற்றும் விஜயகாந்தின் ரமணா படத்திலும் அரசியல் ஆழமாக பேசப்பட்டிருக்கும். விஜய் மற்றும் விஜயகாந்த் இருவரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகர்கள் இவர்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்லும் பொழுது அது நிச்சயமாக மக்களிடம் போய் சேரும் என்பது ஏ ஆர் முருகதாஸின் நம்பிக்கையாக இருக்கிறது.

Continue Reading

More in Cinema News

To Top