ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து வாபஸ்… வெளியான ஸ்வீட் நியூஸ்…
Nov 25, 2024, 16:24 IST
AR Rahman: பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு விவாகரத்து விஷயம் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கோலிவுட் பிரபல நடிகர்கள் தங்களுடைய விவாகரத்தை அறிவித்து வந்தனர். தனுஷ், ஜி. வி. பிரகாஷ், ஜெயம்ரவி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. தொடர்ச்சியாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்தார். இதையும் படிங்க: ரஜினியின் வேகமான ஸ்டைல்… வியந்து போன சிவாஜி அவருக்காக செய்த விஷயம்! இவருடைய மனைவி சாய்ரா பானு தன்னுடைய வழக்கறிஞர் மூலம் கணவரை பிரிவதாக அறிவித்தார். தொடர்ந்து ஏ ஆர். ரஹ்மான் தரப்பும் இதை அறிவித்தது. இதற்கிடையில் ரஹ்மானிடம் பணி புரியும் பேசிஸ்ட் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து சர்ச்சையாக மாறியது. தொடர்ச்சியாக பலரும் அவதூறுகளை பரப்பி வந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மான் தன் மீது ஆதாரமில்லாமல் பேசும் யூட்யூப் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பலரும் ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து குறித்து பேசுவதை குறைத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையும் படிங்க: முதல் படமாக ஓடிடியில் எண்ட்ரியாகும் லக்கி பாஸ்கர்.. தேதி இதுதானுங்கோ!
யோசிக்காமல் சாய்ரா பானு இதை அறிவித்து விட்டதாகவும், இந்த விஷயத்தை வழக்காக மாற்ற வேண்டாம். வாபஸ் வாங்கிவிடவும் முடிவெடுத்து இருப்பதாக பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்து இருவரும் நல்ல முடிவை எடுத்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
