Connect with us
mohini

Cinema News

ரஹ்மானின் கிதார் இசைக்கலைஞர் அறிவித்த விவாகரத்து!… அதுவும் எப்ப தெரியுமா?!..

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள கிதார் இசைகலைஞர் மோகினி டே விவாகரத்து அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலமாக கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து ஏ ஆர். ரகுமான் இன்று காலை தனது விவாகரத்தை உறுதி செய்திருந்தார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கண்டுகொள்ளாத நயனின் கல்யாண கேசட்!.. இதுக்குதான் இவ்வளவு அக்கப்போறா!…

இந்த செய்தியானது ரஹ்மானின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த 29 ஆண்டுகளாக வாழ்ந்த திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். ஏ ஆர் ரகுமான் இன்று காலை வெளியிட்ட பதிவில் விரைவில் 30 ஆண்டு திருமண நாளை கொண்டாட இருந்தோம். ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஏ ஆர் ரகுமானிடம் கிதார் இசை கலைஞராக வேலை பார்த்து வரும் மோகினி டே தனது கணவர் மார்க்கை பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். சாய்ரா பானு விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்தில் ரஹ்மானின் இசை கலைஞர் விவாகரத்து அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

rahman

rahman

மோகினியும் அவரின் கணவர் மார்க் ஹெட்சும் கூட்டாக சேர்ந்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் நானும் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இருவரும் பேசி மனம் ஒத்து இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். எங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட காரணத்தால் பிரிந்து விடுவது தான் சரி என்கின்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம்.

நண்பர்களாக இருப்போம். MaMoGi, மோகினி டே குரூப்ஸ் உள்ளிட்டவற்றில் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை பார்ப்போம். நாங்கள் சேர்ந்து வேலை செய்வது எப்போதுமே நிற்காது. உங்களின் ஆதரவுக்கு நன்றி. எங்கள் முடிவை கவுரவித்து இந்த நேரத்தில் எங்களின் ப்ரைவசியை மதிக்க வேண்டும். எந்த கணிப்பும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: Vijay TVK: விஜய் கட்சியில் இணைந்தாரா பிரபல நடிகை? வைரலாகும் வீடியோவைப் பாருங்க..!

இவர் ஏஆர் ரகுமானுடன் சேர்ந்து உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் கிதார் வாசித்திருக்கின்றார். 29 வயதான இவர் தற்போது விவாகரத்து அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top