Connect with us
parthiban

Cinema News

படம் பார்த்து பாராட்டிய இசைப்புயல்…. மகிழ்ச்சியில் பார்த்திபன்

தனது வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். மாறுபட்ட கதைகள் மூலம் ஒரு இயக்குனராக தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் தான் பார்த்திபன். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்துள்ளார்.

அந்த வகையில் இறுதியாக பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் பெரிய அளவில் வசூல் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார். வேறு எந்த கதாபாத்திரமும் படத்தில் கிடையாது.

இதன் மூலம் ஒத்த செருப்பு படம் சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பார்த்திபன் அடுத்ததாக சிங்கிள் ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இரவின் நிழல் படத்தை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

iravin nizhal

iravin nizhal

இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “இரவின் நிழல்-இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான். இது சிங்கிள் ஷாட்டில் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும், உதாரண படமாகவும் இருக்கும் என்று பாராட்டி கீ-போர்டில் விரல் ஓட்டினார். வைரல் ஆகப் போகும் இசை பிரளயத்திற்காக” என பதிவிட்டுள்ளார்.

முழு படத்தையும் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்த படத்திற்கும் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அபிஷேக் பச்சன் நடிப்பில் ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் பார்த்திபன் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top