×

"தலைவன் இருக்கின்றான்" கமல் உடன் இணையும் ஏ.ஆர் ரஹ்மான்!

உலக நாயகன்  கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘தேவர் மகன்'.  இப்படத்தில்நடிகர்  சிவசி கணேஷன் , ரேவதி , கௌதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் தொடர்ச்சியாக  ’தலைவன் இருக்கின்றான்’ என்ற இரண்டாம் பாக அறிவிப்பு வெளியானது.

 

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த  வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. பிரம்மாண்ட நிறுவனம்  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் சமூக வலைதளங்களில் ’தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்து நிறைய விஷயங்களை உரையாட உள்ளனர். இந்த உரையாடலில் இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்டுகிறது. பல மாதங்களாக கிடப்பில் இருந்து வந்த இப்படத்தின் வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைபெறுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News