மணிரத்னத்தின் புதுப்படம்!.. மியூசிக் டைரக்டர் அவர்தான்!.. அதிகாரப்பூர்வ அப்டேட்!…

 
மணிரத்னத்தின் புதுப்படம்!.. மியூசிக் டைரக்டர் அவர்தான்!.. அதிகாரப்பூர்வ அப்டேட்!…

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா அளவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். திரைப்படங்களில் புதுப்புது தொழில் நுட்பங்களை பயன்படுத்தியவர்.. வசனங்களை குறைத்து காட்சி வழியாக கதை சொன்ன இயக்குனர் இவர். மாதவன், அரவிந்த்சாமி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை அறிமுகம் செய்தவர் இவர்.

மணிரத்னத்தின் திரைப்படங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்த பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் கமலை வைத்து தக் லைப் படத்தை மணிரத்னம் இயக்கினார்.. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை..

தற்போது விஜய் சேதுபதி, சாய்பல்லவி ஆகியோரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.. வழக்கமாக மணிரத்தினம் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பாளர்.. ஆனால் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

மணிரத்னத்தின் புதுப்படம்!.. மியூசிக் டைரக்டர் அவர்தான்!.. அதிகாரப்பூர்வ அப்டேட்!…

இதைப்பார்த்து ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் ஷாக்கானார்கள். ஆனால், அந்த தகவல் பொய் என்பது தெரிய வந்திருக்கிறது.. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்கிறார் என மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ஆகியவை
இணைந்து தயாரிக்கவுள்ளது.

From Around the web