Categories: latest news

ARRahman: ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து…. மகன் என்ன சொல்றாரு பாருங்க..!

திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து தங்களது திருமண பந்தத்தினை முறித்து கொள்வதாக அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு.

கடினமான முடிவை…

இது குறித்து சாய்ராவின் வழக்கறிஞர், ‘ திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு சாய்ரா தனது கணவர் ஏஆர்.ரஹ்மானைப் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் சில சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை கண்டறிந்துள்ளார்.

தனியுரிமை

வலி மிகுந்த இந்த சூழலுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார் இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை மற்றும் புரிதலைஎ அவர் வேண்டுகிறார் ” என அறிவித்திருக்கிறார்.

அமீன்

ARRahman: இசைப்புயல் குடும்பத்தில் ‘வீசியது’ புயல்… விவாகரத்தை அறிவித்தார் மனைவி!

இந்த நிலையில் ரஹ்மான்- சாய்ராவின் தம்பதியரின் மகன் அமீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மரியாதை கொடுங்கள்,’ என ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து விரைவில் ரஹ்மான் தன்னுடைய விளக்கத்தை அளிப்பார் என தெரிகிறது. இருவரும் பிரிவதால் குழந்தைகள் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஒரு நீண்ட அறிக்கை அவரிடம் இருந்து வரலாம்.

ARR1

அல்லது இரண்டே வரியில் எங்களது தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் என்றும் சிம்பிளாக முடிக்கலாம். என்ன சொல்ல போகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v