Categories: Cinema News latest news

ரஹ்மான்கிட்ட அத கேட்டுட்டு இப்போ வரைக்கும் ஃபீல் பண்றேன்! சூர்யாவுக்கு இப்படி ஒரு கில்டியா?

Actor Surya: தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. ஒரு பக்கம் விஜய் அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த இருப்பதால் விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் சூர்யா விஜய்யின் இடத்தில் வைத்து பார்க்கப்படுவார் எனக் கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் கோட் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை தன்னுடைய கலையுலக வாரிசு என மறைமுகமாக விஜய் தெரிவித்திருக்கிறார் என்று சொன்னாலும் அவ்வளவு சீக்கிரம் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயனால் பிடித்து விட முடியாது. ஒருவேளை சூர்யா அந்த இடத்திற்கு கூட வர வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு சில பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து, மீனா… பாண்டியனுக்கு பிறந்தநாள்…

அந்த அளவுக்கு சூர்யாவும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மூலம் தனது புதுப்புது பரிணாமங்களை காட்டி வருகிறார். கங்குவா திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் சூர்யா. அந்த படம் ரிலீஸ் ஆனால் அது தமிழ் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு போகும் ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து அவருடைய 44 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படி அடுத்தடுத்த கமிட்டுகளால் சினிமாவில் ஒரு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யாவின் ஒரு பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க:செல்போன் சுவிட்ச் ஆப்! நாட் ரீச்சபிள்.. எங்கே போனார் ஜெயம் ரவி? ஷாக்கிங் ரிப்போர்ட்!..

ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் தான் சூர்யா ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஞானவேல் ராஜா அந்த படத்தை தயாரித்தாலும் சூர்யாவின் 2டி நிறுவனமும் அந்த படத்தில் இருந்து தான் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது .

அதனால் இது சூர்யாவின் ப்ரொடக்சன் ஆகவே கருதப்பட்டது. இந்த நிலையில் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான். படம் ரிலீஸ் ஆகிவிட்டது. படத்தை பார்த்த பலரும் படம் மிகவும் ஸ்லோவாக போகிற மாதிரி ஃபீல் பண்ணினார்களாம். அதற்கு காரணம் படத்தில் அமைந்த ரீ ரெக்கார்டிங்.

இதையும் படிங்க:அக்கா இப்போதான் வந்துருக்காரு.. கமலை முடிச்சிவிட்டது பத்தலையா? கலாய் வாங்கும் பிக்பாஸ் பிரபலம்

அதனால் இதை ஏ ஆர் ரகுமானிடம் சூர்யா போய் சொல்லி இருக்கிறார். ரீ ரிக்கார்டிங் படத்தை ஸ்லோவாக காட்டுகிறது. அதனால் கொஞ்சம் மாற்றி அமைக்கலாமா என கேட்டாராம். அன்று இரவு 10 மணி இருக்குமாம். படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசை கலைஞர்களை எல்லாம் அழைத்து வேறு விதமான இசையை போட்டு ஒரு சிடியை சூர்யாவிடம் கொடுத்து இதை அப்லோடு செய்து கொள்ளுங்கள் என சொன்னாராம்.

இதைப் பற்றி கூறிய சூர்யா  ‘நான் அன்று கூறியது உங்களுடைய வொர்க்கில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாமே என்பதைப் போல் ஏ ஆர் ரகுமானிடம் கூறியதற்கு சமம். அதை இப்போது நினைத்தால் கூட எனக்கு கில்டியாக இருக்கிறது. நான் அப்படி கேட்டிருக்கக் கூடாது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் அதை எதையும் மனதில் வைக்காமல் எனக்காக செய்து கொடுத்தார்’ என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini