நம்ம ‘அரண்மனைக்கிளி’ பட கதாநாயகியா இவரு?.. வைரல் வீடியோ...

 
gayathri


ராஜ்கிரண் தயாரித்து இயக்கி நடித்து 1993ம் வருடம் வெளியான திரைப்படம்தான் அரண்மனை கிளி. இந்த படத்தில் காயத்ரி என்கிற புதுமுகம் செல்லம்மா என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ரஹனா என்கிற மற்றொரு கதாநாயகி இருந்தாலும் காயத்ரிதான் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

அவருக்கு ‘அடி பூங்குயிலே பூங்குயிலே’, ‘ ராசாவே உன்னை விடமாட்டேன்’ ஆகிய இரண்டு பாடல்களும் படத்தில் இடம்பெற்றிருந்தன். இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட். குறிப்பாக ‘ராசாவே உன்னை விடமாட்டேன்’  பாடலில் காயத்ரி காட்டிய முக பாவனைகள் ரசிகர்களை கட்டிப்போட்டது.

ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படத்தில் காயத்ரி நடிப்பதாக இருந்தது. அதன்பின் அவர் நடிக்காமல் போக அவருக்கு பதில் ரோஜா இந்த படத்தில் அறிமுகமானார்.
அரண்மனை கிளி படத்திற்கு பின் எந்த படத்திலும் காயத்ரி நடிக்கவில்லை என்றாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்திருந்தார்.

காயத்ரி திருமணமாகி சென்னையில் செட்டிலாகிவிட்டார். அவரின் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த பலரும் பல வருடங்கள் கழித்து காயத்ரி பார்த்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டு வருகிறார்கள்.

Murugan ..
Murugan ..

5164 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web