Kanchana
Aramanai4: தமிழ் சினிமா தற்போது வெற்றி படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதில் பிஸியாகி வருகிறது. தற்போது மீண்டும் ஒரு அடுத்த பாகம் கொண்ட திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக கோலிவுட்டில் இதுவரை இரண்டாம் பாகங்கள் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரிய அளவிலான வரவேற்பு பெறவில்லை. ஆனால் விதிவிலக்காக அமைந்திருப்பது அரண்மனை மற்றும் காஞ்சனா திரைப்படங்கள் தான். இதில் அரண்மனை நான்காம் பாகம் இந்த ஆண்டு வெளியாகி ஓரளவு நல்ல வசூலை குவித்திருந்தது.
இதையும் படிங்க: டைவர்சா எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..
தற்போது அதை ரூட்டை பிடித்து காஞ்சனா படத்தின் நான்காம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை எப்போதும் போல நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. முதல் மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இதனால் நான்காம் பாகத்திற்கு அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தை மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான கோல்ட் மைன்ஸ் மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. இதே நிறுவனம்தான் ராகவா லாரன்ஸின் ஹண்டர் திரைப்படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Nayanthara
இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய இடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை நயன்தாராவை ஹீரோயினாக போடவும் படக்குழு திட்டமிட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…
100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்திருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இனி வருடத்திற்கு மூன்று திரைப்படங்கள் நடிக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை அடுத்து அவருடைய படங்கள் தொடர்ச்சியாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவால் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…
Dhanush: இட்லி…
Vijay: கரூர்…
Kaur: கடந்த…