Arasan: நடந்ததே 20 நாள் ஷூட்டிங்தான்!.. ஐயோ பாவம் சிம்பு!.. இப்படி மாட்டிக்கிட்டாரே!..

அரசன் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியே கசிந்திருக்கிறது.
 
arasan movie
அரசன் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியே கசிந்திருக்கிறது.


கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். வழக்கமாக தனுசுடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன் சிம்புவுடன் கூட்டணி அமைத்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கியவடசென்னை படத்தின் ஒரு பகுதியாக இந்த படத்தை உருவாக்கப் போவதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். எனவே இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் நெல்சன், சிம்பு இருவரையும் வைத்து ஒரு புரமோஷன் வீடியோவைவும் வெற்றிமாறன் வெளியிட்டார்..

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் பல காரணங்களால் ஷூட்டிங் தடைபட்டுக் கொண்டே இருந்தது. கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்பட்டது. எப்படியும் பாதி படமாவது முடிந்திருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசன் படத்தின் ஷூட்டிங் இதுவரை 20 நாட்கள் மட்டுமே நடந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சிம்புவை வைத்து அரசன், கென் கருணாஸை வைத்து ராஜன் வகையறா ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்திலே வெற்றிமாறான் இயக்கி வருவதே தாமதத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.  ஒரே ஷெட்டை மாறி மாறி இரண்டு படங்களுக்கும் பயன்படுத்தி வருகிறாராம். எனவே, ஷெட்யூலாக திட்டமிடாமல் அடுத்தநாள் என்ன ஷூட்டிங் என்பதை மாலையில்தான் வெற்றிமாறன் முடிவு செய்கிறாராம்.

அரசன் படத்தை ஜூலைக்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் அஸ்வத் மாரிமுத்து படத்தில் நடிக்க சிம்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் வெற்றி மாறன் படமெடுக்கும் வேகத்தை பார்க்கும் போது அது நடக்குமா என்பது தெரியவில்லை..

Tags

From Around the web