STR49: சிம்புவிடம் வசமா சிக்கிய வெற்றிமாறன்!.. அரசன் படம் டேக் ஆப் ஆகுமா?...
சிம்பு என்றாலே சிக்கல்தான் என்கிற நிலைதான் கோலிவுட்டில் இப்போதும் இருக்கிறது. சிம்பு நடிக்கும் படம் கண்டிப்பாக எப்போதும் பிரச்சினைகளில் சிக்கும். அந்த பிரச்சனையை சிம்புவே உருவாக்குவார். இல்லையெனில் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் உருவாக்குவார். சிம்புவின் பல படங்கள் பல பஞ்சாயத்துக்களை பார்த்திருக்கிறது.
சினிமாவைப் பொறுத்தவரை சிம்புவுக்கு சிம்புவே எதிரியாக இருக்கிறார். அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்கிறார் என்பதுதான் உண்மை. திறமையான நடிகராக இருந்தும் சில காரணங்களால் அவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. சரியாக ஷூட்டிங் போகாதது, பாதி படம் நடித்தபின் சம்பளத்தை சேர்த்து கேட்பது.. என எப்போதும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் குடைச்சல் கொடுப்பவர் சிம்பு. அதேபோல் மற்ற நடிகர்களைப் போல தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகராகவும் சிம்பு இருப்பதில்லை. அவரின் பத்து தல படம் வெளியாகி 2 வருடங்களுக்கு பின் தக் லைப் படம் வெளிவந்தது. ஆனால் அந்த படமும் ஓடவில்லை.
பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆனார் சிம்பு. ஆனால் சில காரணங்களால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்கிற படத்தில் கமிட்டானார் சிம்பு. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு பட வேலைகள் நடந்தது. ஒரு புரமோஷன் வீடியோவையும் வெளியிட்டார்கள்.

ஆனால் ஐஸ்வரி கணேஷ் தயாரிப்பில் 3 படங்களில் நடித்து கொடுப்பதாக சொல்லி அவரிடம் சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கினார் சிம்பு. ஆனால் சொன்னபடி செய்யவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்கு போட்டார் ஐசரி கணேஷ். சிம்பு எந்த புதிய படத்தை தொடங்கினாலும் ஐஸ்வரி கணேஷ் மூலம் சிக்கல் வரும் என்கிற நிலைதான் இப்போது.
அவரிடம் வாங்கிய பணத்தை சிம்பு திருப்பி கொடுக்காமல் அரசன் படம் தொடங்காது என்கிறார்கள். நவம்பர் 24ம் தேதியான இன்று அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்க வேண்டும். ஆனால் துவங்கப்படவில்லை. அதற்கு ஐஸ்வரி கணேஷ்தான் காரணம் என்கிறார்கள். எனவே அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசன் பட தயாரிப்பாளர் கலைப்புலி இறங்கியிருக்கிறார்.
ஒருபக்கம் சிம்புவோ துபாய், லண்டன் என மாறி மாறி பயணித்து வருகிறாராம். எப்போது இந்த பிரச்சனை பேசித் தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கும் என தெரியவில்லை. சிம்பு மூலம் தொடர்ந்து பிரச்சினைகள் வருவதால் அப்செட்டில் இருக்கிறாராம் வெற்றிமாறன்.
