1. Home
  2. Latest News

STR49: புரமோஷன் வீடியோவுக்கே இவ்வளவு பில்டப்பா!.. அலப்பற தாங்க முடியலடா சாமி!...

arasan
வெற்றிமாறன் சிம்பு இணையும் அரசன் பட புரமோ வீடியோ பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அரசன்

Arasan: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படம்தான் அரசன். வழக்கமாக தனுசுடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன் இந்த முறை சிம்பு பக்கம் போனதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பே இப்பட வேலைகள் துவங்கியது. சிம்புவை வைத்து புரமோஷன் வீடியோவுக்கான ஷூட்டிங்கை சில நாட்கள் எடுத்தார் வெற்றிமாறன். அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலனாது. ஆனால் அதோடு பட வேலைகள் நின்று விட்டது.

வெற்றிமாறன், சிம்பு ஆகியோரின் சம்பள பிரச்சினை தொடர்பாக கலைப்புலி தாணுவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் இந்த படத்தை அவர் டிராப் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் வெற்றிமாறனின் முயற்சியில் தற்போது சுமூக முடிவு எட்டப்பட்டு அரசன் படவேலைகள் மீண்டும் துவங்கியிருக்கிறது.

சமீபத்தில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு படத்தின் தலைப்பையும் அறிவித்தார்கள். தனுசுக்கு அசுரனை கொடுத்த வெற்றிமாறன் சிம்புவுக்கு அரசனை கொடுத்திருக்கிறார்.இப்படத்தின் புரமோ வீடியோ எப்போது வரும் என சிம்பு ரசிகர் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது. ஒருவழியாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16ஆம் தேதியை லாக் செய்தார்கள்.

arasan

ஒருபக்கம் இந்த புரமோ வீடியோவை யூடியூபில் மட்டும் வெளியிடாமல், தியேட்டர்களிலும் வெளியிடப் போவதாக கலைக்குழு தாணு அறிவித்தார். இந்நிலையில் வருகிற 16-ஆம் தேதி அரசன் படத்தின் புரமோ வீடியோ தியேட்டர்களில் மாலை 6.02 மணிக்கும், அடுத்த நாள் அதாவது 17ம் தேதி காலை 10.07 மணிக்கு யுடியூபிலும் வெளியாகும் எனவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.தமிழ் சினிமாவில் ஒரு புரமோ வீடியோவுக்கு இவ்வளவு பில்டப் செய்தது இந்த படத்தில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.