
Cinema News
STR49: தனுஷுக்கு அசுரன்.. சிம்புவுக்கு அரசன்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட வெற்றிமாறன்!…
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க முன்வரவில்லை. எனவே சிம்புவை வைத்து ஏற்கனவே அவர் இயக்கிய வடசென்னை படத்தின் கிளை கதையை உருவாக்கி ஒரு படத்தை அறிவித்தார் வெற்றிமாறன். முதல் முறையாக வெற்றிமாறனுடன் சிம்பு இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

சிம்புவின் 49 வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அதை நிறுத்திவிட்டு வெற்றிமாறன் படத்தில் இணைந்தார் சிம்பு. சிம்புவை வைத்து சில நாட்கள் புரமோஷன் ஷூட் நடத்தினார் வெற்றிமாறன். இப்படத்தை கலைப்புழு தாணு தயாரித்தார்.
ஆனால் சில காரணங்களால் பட வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டது. அதன்பின் பேச்சு வார்த்தை நடந்து தற்போது படம் மீண்டும் துவங்கவிருக்கிறது. இந்நிலையில்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. தனுசுக்கு அசுரன் போல சிம்புவுக்கு அரசன் தலைப்பை கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஒரு சைக்கிளின் அருகே ரத்தம் வலியும் கத்தியை பிடித்துக் கொண்டு சிம்பு நிற்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
போஸ்டரை பார்க்கும்போது கண்டிப்பாக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இந்த படத்திலும் இடம் பெற்றிருக்கும் என கணிக்கப்படுகிறது. வெற்றிமாறன் படம் என்றாலே வன்முறை காட்சிகள் மிகவும் அதிகமாகவே இருக்கும். அவரின் பொல்லாதவன், வடசென்னை, அசுரன் போன்ற எல்லா படங்களிலும் வன்முறை காட்சிகள் தூக்கலாகவே இருந்த்து.

அதோடு, தனது படங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு பற்றியும் அவர் பேசுவார். கீழ் ஜாதியினரை மேல் ஜாதியினர் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அசுரனில் காட்டியிருந்தார். பல வருடங்களாகவே சிம்பு வன்முறை காட்சிகள் அதிகம் கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் வெற்றிமாறன் படத்தில் நடிப்பது மூலம் அவரும் வன்முறைக்குள் வந்திருக்கிறார். வட சென்னை படத்தில் வந்த கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் வரும் என வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார். அரசன் திரைப்படம் சிம்புவுக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.