×

எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரியாக களம் இறங்கும் பிக்பாஸ் ஆரவ்
 

பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
60f4a2fb-cdbf-46d2-a9eb-7d8658ba1a16

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ் தற்போது உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஆரவ். முதல் சீசனில் ஆரவ், ஓவியாவை வைத்து தான் காதல் டிராக் ஓடியது. அவர் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததை யாரும் இன்னும் மறக்கவில்லை. 

முதல் சீசனில் டைட்டிலை வென்ற பிறகு ஆரவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் நடித்தார் ஆரவ். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதையடுத்து அவர் புதுமுகம் நரேஷ் சம்பத் இயக்கத்தில் ராஜபீமா படத்தில் நடித்து முடித்துள்ளார். 

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிமா நார்வால் நடித்திருக்கிறார். ஓவியா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். இந்நிலையில் ஆரவின் புதுப்படம் குறித்து தெரிய வந்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின். 

இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த படத்தில் ஆரவ் தான் வில்லனாம். படப்பிடிப்பு தளத்தில் அவர் உதயநிதியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

aarav

From around the web

Trending Videos

Tamilnadu News