×

பயில்வானுக்கு அழுகிற சீன் செட் ஆகல!... அதட்டல் சீனா கொடு பிக்பாஸு...

 

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 4வது சீசனுக்கு முன்னேறியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பாலாஜி முருகதாஸ் சக போட்டியாளர்களிடம் பேசும் முறை எல்லோருக்கும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், நான் வெளிப்படையாக பேசுகிறேன் என பாலாஜி தொடர்ந்து கூறிவருகிறார். 

வீட்டை பெருக்குவது தொடர்பான நேற்று பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை எழுந்தது. பாலாஜிக்கு எதிராக அர்ச்சனா, ரியோ என அனைவரும் பேச, அவர்களுக்கு சளைக்காமல் பாலா பேசுவதுடன் நேற்று நிகழ்ச்சி முடிந்தது. இதனைத்தொடர்ந்து, அர்ச்சனாவும், ரியோவும் பேசுவதை கேட்டு பாலா அழும் புரமோ வீடியோ வெளியானது.

இதைக்கண்ட பாலாஜி ஆதரவாளர்கள் ‘கடைசியா குரூப்பா சேர்ந்து குழந்தை அழுகை வச்சுட்டீங்க இனிமேல் தான்டா வெடிக்கும்’ என பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாலாஜியை தனது மகனாக கருதுவதாக அவரிடம் அர்ச்சனா கூற, அவரிடம் பாலாஜி முருகதாஸ் வருத்தம் தெரிவிக்கும் செண்டிமெண்ட் வீடியோ வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, பிக்பாஸ் வீட்டில் இன்று செண்டிமெண்ட் ஆறாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘யோவ் பிக்பாசு!... பயில்வானுக்கு அழுகிற சீன் செட் ஆகல!... அதனால நல்லா அதட்டல் சீனா பார்த்து குடுயா!’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News