archana
Archana: சின்னத்திரையில் வில்லி நடிகையாக நடித்தாலும் பிக்பாஸ் தமிழின் டைட்டில் வின்னரான அர்ச்சனா தன்னுடைய நிச்சயத்தார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
ராஜா ராணி சீரியலில் வில்லியாக எண்ட்ரி கொடுத்தவர் அர்ச்சனா. வில்லி என்றால் கூட அவர் மீது கோபம் வராத அளவு இருந்தது வில்லத்தனம். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தார்.
ஆனால் வரும் போது அழுகாட்சியுடன் இவராலெல்லாம் ஒரு ரெண்டு வாரம் கூட தாண்டவே மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாரம் பிரதீப்பை போட்டியாளர்களாக சேர்ந்து வெளியேற்ற அதற்கு எதிராக நின்று ரசிகர்களிடம் நல்ல பேரை தட்டிக்கொண்டார் அர்ச்சனா.
அதன் பின்னர் ஒவ்வொரு காயாக நகர்த்தி தன்னுடைய டைட்டிலை தெளிவாக தட்டி வந்தார். இவர் பிக்பாஸ் தமிழின் முதல் வைல்ட் கார்ட் வின்னர் மற்றும் இரண்டாவது பெண் வின்னராகவும் அங்கீகாரம் பெற்றார். இவருக்கும் பாரதி கண்ணம்மா ஹீரோ அருணுக்கு காதல் கிசுகிசுக்கள் இருந்தது.
ஆனால் முதலில் இரு தரப்பும் பெரிய அளவில் வாய் திறக்காமலே இருந்தது. அர்ச்சனா டைட்டிலை தட்டிய அடுத்த சீசனில் அருணும் பிக்பாஸுக்குள் வந்தார். பெரிய அளவில் அவர் விளையாடவில்லை என்றாலும் கடைசி வாரம் வரை தாக்குப்பிடித்தார். அந்த நேரத்தில் நண்பர்கள் உள்ளே வரும் ஒரு சுற்று நடந்தது.
அதில் அர்ச்சனா அருணுக்காக உள்ளே வந்தார். அதற்கு முன்பே அருணுக்காக அர்ச்சனா பேசியது. அருண் உள்ளே இருந்து காதல் மொழியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது என வைரலானது. இதனால் இந்த முறை எதுவும் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதலை அந்த இடத்திலேயே இருவரும் உறுதி செய்தனர்.
இந்நிலையில் இருவரும் தற்போது நிச்சயம் முடிந்து விட்டதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியின் அடுத்த ரியல் செலிபிரிட்டி ஜோடியாக இவர்கள் மாறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…