×

பெரியாரிஸ்டுகள் ஜாதிக்கு எதிரானவர்களா? ஒரே ஒரு ஜாதிக்கு மட்டும் எதிரானவர்களா? கஸ்தூரி கேள்வி

தமிழகத்தில் மூடநம்பிக்கையையும் ஜாதியையும் ஒழிக்க பெரியார் பாடுபட்டார் என்று பெரியாரிஸ்டுகள் கூறிவரும் நிலையில் பெரியாரிஸ்டுகள் ஒட்டுமொத்த ஜாதிக்கும் எதிரானவர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் எதிரானவர்களா? என்ற கேள்வியை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பி உள்ளார் 

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது கண்டனம் தெரிவித்து வரும் பெரியார் ஆதரவாளர்கள் நேற்று ரஜினிகாந்த் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது அவர்கள் கையில் பல பதாகைகள் வைத்திருந்தனர். அதில் பெரும்பாலான பதாகைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக மட்டுமே இருந்தன

இந்த நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி ’பெரியார் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த ஜாதிக்கு எதிரானவர்களா? அல்லது ஒரே ஒரு ஜாதிக்கு மட்டும் எதிரானவர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்

அதேபோல் மதத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிவரும் பெரியார் ஆதரவாளர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே எதிராக பேசி வருவதாகவும் சமூக வலைதள பயனாளிகள் கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு பதில் அளித்து வருகின்றனர். இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web

Trending Videos

Tamilnadu News