×

ஒரு புருஷன கட்டினாள் நீ யோக்கியமா...? கிழிச்சு தொங்க விட்டுருவேன்: அனல் பறக்கும் பேட்டி!

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

 

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு லைவ் பேட்டி கொடுத்தனர்.

அந்த பேட்டியின் ஆரம்பத்திலே ஆங்கரை மரியாதை குறைவாக பேசிய வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் தட்டி கேட்கிறார். அப்டித்தான் இந்த வாக்குவாதம் ஆரம்பித்தது. பின்னர் வனிதா மிகவும் தரம் கெட்ட வார்த்தைகளால் லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டுகிறார். "நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற,  உன்ன கிழிச்சு தொங்க விரட்டுருவேன். ஒரு புருஷனை கட்டிக்கிட்டு வாழ்ந்த நீ பெரிய யோக்கியமா...? உன் புருஷன் கேடுகெட்ட வெட்கம் கெட்ட ஜென்மம் என கண்டிப்படி கீழ்த்தரமாக திட்டிவிட்டார் வனிதா.

உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் ஆங்கரிடம், இந்த மாதிரி குழாயடி சண்டை போடுறவங்க கூடலாம் என்னால் பேசமுடியாது என டீசண்டாக பதிலளித்து முடித்துவிட்டார். ஒரு கட்டத்தில் ஆங்கர் என்ன செய்வதென்றே தெரியாமல் சைலண்ட் ஆகிவிட்டார். இந்த மோசமான வீடியோவை பேட்டி எடுத்த சேனலே வெளியிடவில்லை. ஆனால் வனிதா அதனை வீடியோ ரெகார்ட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கமெண்ட்ஸ் சேக்ஷனை ஆப் செய்துள்ளார். தரம் கேட்ட வனிதாவின் வார்த்தைகள் கேட்டு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதோ அந்த முழு வீடியோ..


 

From around the web

Trending Videos

Tamilnadu News