×

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோபிநாத் கலந்துகொள்ளப்போவது உறுதியா?

கமல்ஹாசான் இதுவரை தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசன்களும் ஹிட் அடித்து அதற்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆர்வமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஏற்கனவே ஒரு பட்டியல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

 

அந்த போட்டியாளர்களில் ஒருவராக நீயா நானா புகழ் கோபிநாத்தும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து பார்க்கலையில் "கோபிநாத் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை" என்று ஒரு தரப்பு அடித்து கூறுகிறது.

அதற்கு முக்கிய காரணமே, கோபிநாத் குடும்பத்தின் மீது அதிக அக்கறை பாசம் கொண்டவர் என்பதால் அவரால் குடும்பத்தை பிரிந்து 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் சாத்தியமே இல்லை என்கின்றனர். ஆக கூடிய விரைவில் விஜய் டிவியை அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியிட்டால் தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

From around the web

Trending Videos

Tamilnadu News