மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிக்கொம்பன்’ – இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
மேஜிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அரிகொம்பன் படத்தை மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இப்படத்திற்கு சாகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980களின் பின்னணியில் காட்டுப் பகுதியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 24-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன், நடிகராக அறிமுகமாக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவிற்கு வந்த எனக்கு இயக்குநராகவும் மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது இதற்கு முன்பு எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத நிலையில், நான் நடித்த திரைப்படங்களின் அனுபவங்களைக் கொண்டே இப்படத்தை இயக்கியிருக்கிறேன் என கூறியுள்ளார்.

நாயகி தேவிகா கிருஷ்ணன் பேசும் போது, மூத்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது கல்லூரியில் படித்த அனுபவத்தைப் போன்று இருந்தது, இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு நன்றி என்று கூறினார்.

நடிகர் அப்புக்குட்டி பேசும்போது, ஆரம்பத்தில் மிதுன் இயக்குநராக இருந்தது தயக்கம் இருந்ததாகவும், ஆனால் படத்தின் கதையையும் படப்பிடிப்புத் தளத்தில் அவர் செய்த முயற்சிகளையும் பார்த்தபோது அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
மேலும், இப்படம் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் அறிவித்துள்ளார். புதிய நடிகர்களை வைத்து உருவாகியுள்ள அரிக்கொம்பன் திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
