Categories: Cinema News latest news

எங்க வந்து என்ன கேள்விக் கேட்குற…. டாக்டர் பட்டம் வாங்கின அர்ஜூன் பேசுறதைப் பாருங்க…!

ஆக்ஷன் கிங் அர்ஜூன் படங்கள் என்றாலே பைட் சூப்பராக இருக்கும். குறிப்பாக இவரது படங்களில் நாட்டுப்பற்று தூக்கலாக இருக்கும். காரணம் இவர் பிறந்ததே சுதந்திரத் தினத்தன்று தான். அதனால் தாயின் மணிக்கொடி, அடிமைச்சங்கிலி, சுதந்திரம், ஜெய்ஹிந்த் என நாட்டுப்பற்றைத் தூண்டும் வகையில் பல படங்களில் நடித்து அசத்தினார்.

Also read: ஓவர் கிரிஞ்சு… ஒரு மண்ணும் இல்ல… நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரி.. Honest review இதோ!..

படங்களில் இவர் பேசும் துடிப்புமிக்க வசனமும், முகபாவனையும், ஆக்ஷனில் அதிரடி காட்டுவதும் நம்மையே பிரமிக்க வைக்கும். ஷங்கரின் இயக்கத்தில் ஜென்டில்மேன் மற்றும் முதல்வன் படங்களில் இவரது நடிப்புப் பட்டையைக் கிளப்பியது.

கௌரவ டாக்டர் பட்டம்

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இவரது சேவையைப் பாராட்டி எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

Arjun

ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அர்ஜூன் பேசும்போது எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துருக்காங்க. இதுக்கு நான் எந்தளவு தகுதி உடையவன்னு தெரியல. ஆனா பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்கு என்றார். தொடர்ந்து அவர் விழாவில் பேசும்போது என்னுடைய ஏவியை பார்க்கும்போது கூச்சமாகத் தான் இருந்தது. வாசு சார் டைரக்ட் பண்ணின சாது என்ற படம் மிஸ் ஆகிடுச்சு என்றார்.

 என்ன கேள்விக் கேட்குற?

இடையில் பத்திரிகையாளர்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் போது விடாமுயற்சி, கங்குவா பத்திக் கேட்டாங்க. எங்க வந்து என்ன கேள்விக் கேட்குறன்னு சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நழுவினார். ‘இப்ப கேட்பாங்களா, இங்க வந்து கங்குவாவா..?’ என கேள்வி கேட்ட நிருபரைப் பயமுறுத்துவது போல கத்தியபடி நடித்தார். அப்போது அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டது. இயக்குனர் பி.வாசுவுக்கும் இதே போல டாக்டர் பட்டம் கொடுக்கப் பட்டது.

கர்ணா

Also read: கையில் வீச்சருவாவுடன் ரத்தம் தெறிக்க மிரட்டலான லுக்கில் நயன்தாரா!… டீசர் வீடியோ இதோ!..

அர்ஜூன் நடிப்பில் கர்ணா படம் மிகவும் வித்தியாசமானது. இதில் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். சமீபகாலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v