குடும்பமே ஆக்‌ஷன் கிங்காக இருக்கே!.. ஒரே ‘பிளாஸ்ட்’ தான்.. ‘பிளாஸ்ட்’ டிரைலர் எப்படி இருக்கு?..

 
குடும்பமே ஆக்‌ஷன் கிங்காக இருக்கே!.. ஒரே ‘பிளாஸ்ட்’ தான்.. ‘பிளாஸ்ட்’ டிரைலர் எப்படி இருக்கு?..

ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் ரசிகர்களை கவரக்கூடிய படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. லியோ, விடாமுயற்சி படங்களில் வில்லனாக நடித்து வந்த அர்ஜுன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘பிளாஸ்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கி தெறிக்கவிட்டுள்ளார்.

டைரக்டர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையில் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள பிளாஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்பமே ஆக்‌ஷன் கிங்காக இருக்கே!.. ஒரே ‘பிளாஸ்ட்’ தான்.. ‘பிளாஸ்ட்’ டிரைலர் எப்படி இருக்கு?..

சாதாரண வாத்தியார் அர்ஜுன் என்றும் அவரது மனைவி தையல்காரி, மகள் ப்ரீத்தி முகுந்தன் சாதாரண அலுவலக பணி செய்பவர் அவர்களை எளிதில் முடித்து விடலாம் என ஒரு வில்லங்க கேஸில் வில்லன் டீம் முடிவெடுக்க அர்ஜுன் ஒரு கராத்தே மாஸ்டர் என்றும் அவரது குடும்பமே கராத்தே பழகியிருப்பதால் வில்லன்களை அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் எல்லாம் பொளந்துக் கட்டும் டிரைலர் தாறுமாறாக உள்ளது.

வரும் மே 28ம் தேதி பிளாஸ்ட் திரைப்படம் தியேட்டர்களை பிளாஸ்ட் ஆக்க முடிவெடுத்துள்ளது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் செம ஹேண்ட்ஸமாகவும் அதிரடியாகவும் நடித்துள்ளார். தக் லைஃப் படத்துக்குப் பிறகு அபிராமி இந்த படத்தில் அதிரடி காட்டியுள்ளார். கண்ணப்பன் படத்தில் கவர்ச்சி காட்டிய ப்ரீத்தி முகுந்தன் சுடிதார் அணிந்து ஆக்‌ஷன் செய்யும் இடங்கள் அருமையாக உள்ளது.

From Around the web