Balst Box office: வசூலில் எகிறி அடிக்கும் பிளாஸ்ட்...3ம் நாள் கலெக்சன் நிலவரம்

அர்ஜூன் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட். அறிமுக இயக்குனர்  சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
blast movie

அர்ஜூன் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட். அறிமுக இயக்குனர்  சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  படத்திற்கு மிகப்பெரிய பலமே அக்சன் காட்சிகள் தான். எந்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்து இயக்குனர் அதற்கேற்றார் போல திரைக்கதையை அமைத்துள்ளார். பல காட்சிகளில் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுகிறார்கள்.  19 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜூன் கதையின் நாயகனாக நடித்து வெற்றி பெற்றுள்ள படம் இது.

படம் வெளியான முதல் நாளில் சுமாரான வசூலையே பெற்றது. ஆனால் படம் குறித்த பாசிடிவ் விமர்சனங்கள் வரவே வசூலும் அதிகரித்துள்ளது.

blast movie

இந்த நிலையில் 3ம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  sacnilk என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய அளவில்  கிராஸ் கலெக்சன் ரூ. 8.48 கோடி, நெட் கலெக்சனாக ரூ 7.35 கோடி ரூபாய வசூல் செய்துள்ளது. முதல் இரண்டு நாட்கள் வசூலை பார்க்கையில் மூன்றாம் நாள் வசூல் இரட்டிப்பாகியுள்ளது.

From Around the web