விமர்சனம் வந்த அளவுக்கு வசூல் வந்ததா?.. அர்ஜுனின் பிளாஸ்ட் முதல் நாள் வசூல் எப்படி?..
அக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது அப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூளை அறிவித்துள்ளனர்.
ஏஜிஎஸ் நிருவனம் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் கே ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளாஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை ரூ.1000 கோடி லஞ்ச ஒப்பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அர்ஜுனின் குடும்பம் சிக்கிக்கொள்வதும், அதனை எதிர்த்து அவர்கள் போராடுவதும் கதையின் மையமாக அமைந்துள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது ஆக்ஷன் காட்சிகள். ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளி வருகிறது. குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் இடம்பெறும் கார் சேஸிங் மற்றும் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர் தனது பின்னணி இசையால் படத்தின் மாஸ் தருணங்களை மேலும் உயர்த்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணனின் காட்சியமைப்பும் படத்திற்கு ஹாலிவுட் தரத்தை கொடுத்துள்ளதாக பாராட்டுகள் குவிகின்றன.
முதல் நாளிலேயே ரூ.1.17 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படும் ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம், வார இறுதிக்குள் மேலும் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
