எப்படி இதெல்லாம் தியேட்டர்ல ஓடுச்சு?... OTT-யில் அர்ஜுனின் 'BLAST'-ஐ ROAST பண்ணும் நெட்டிசன்கள்!
ரசிகர்களை புரிந்து கொள்ளவே முடியாது என்பது இதுதான் போல. சமீப காலமாகவே திரையரங்குகளில் வெளியாகி சூப்பராக ஓடும் படங்கள் OTT-யில் ரிலீஸான பிறகு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு (2026) மே மாதம் இறுதியில் தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவந்த படம் தான் 'பிளாஸ்ட்'. இதில் ஹீரோவாக 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்க, அவருக்கு மனைவியாக அபிராமி நடித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் மகளாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற சுபாஷ்.கே.ராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
'AGS எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்த இந்த படம் திரையரங்குகளில் வெளிவந்தபோது அதிகமாக பாசிட்டிவ் விமர்சனங்களே வந்ததுடன், வசூலிலும் மாஸ் காட்டியது. இந்நிலையில், நேற்று (ஜூன் 25) 'நெட்ஃபிளிக்ஸ்' OTT தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக கிடைத்து வருகிறது.
பாதி படம் ஒரு வீட்ல தான் நடக்குது,
— கார்த்தி (@Universeboss111) June 26, 2026
அங்க அடிதடி நடக்குது,
இஷ்டத்துக்கு கொலை நடக்குது,
ஆனா பக்கத்து வீட்டுக்காரன்லருந்து போலீஸ் வரைக்கும் எவனுக்குமே தெரில,கண்டுபுடிக்கமுடில, படம் முடியிற வரைக்கும் 😂
என்ன எழவு டா இது? #Blast
வில்லன்னு ஒருத்தன் வரான், அவன் மயக்கத்துல இருந்து எழுந்து பத்து போலீஸை கொன்னுட்டு தப்பி போறான் 😵💫
— கார்த்தி (@Universeboss111) June 26, 2026
அந்த சண்டைக்காட்சியில் ஒரு போலீஸ் கைல துப்பாக்கி வச்சிக்கிட்டே அடி வாங்குறார் , அடி வாங்கும்போது துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறுது😂#Blast
#Blast is lazy writing !! I am failing to understand how come movies which gets celebrated in theatres looks so bad in OTT.. screenplay should have some logical sense to make it watchable -
— KR (@kailashram90) June 26, 2026
#Blast Theater La Padam Paathavanuku Kovil Katti Kumdanum Poola...Nallaruku Sonnavanuku la Vera ethachum Perusa Pannanum Valakam Poola Theater Release Review Ellam @Ags_production oda PR work-dha Poola 🤧🤡🤦🏻
— BOOM (@imgj13) June 25, 2026
#Blast 🥱
— King ❤️💛TVK (@King_STR_) June 25, 2026
